வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று திங்கட் கிழமை ஆளுநர் கையளித்தார். அதன் போது, ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.
வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக இருந்த அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் , புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.







No comments