யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள் வர கூடாது என வாய்க்காலுக்கு குறுக்காக மண் அணை போடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் , நல்லூர் மற்றும் வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்கால் மதகு ஒன்று காணப்படுகிறது.
குறித்த மதகுக்கு அருகில் , நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீ தேங்கி நின்றமையால் , நல்லூர் பிரதேச சபையினால் , வீதியோரமாக தற்காலிக வாய்க்கால் அமைக்கப்பட்டு , கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடும் மதகுக்குள் வெள்ள நீரினை விட்டுள்ளனர்.
அதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் கோப்பாய் பிரதேச சபை எல்லையில் உள்ள பெயர் பலகையுடன் , தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ள வாய்க்காலை இடை மறித்து மண் அணை போட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச சபையினர் எமது பிரதேச சபை எல்லைக்குள் எவ்வாறு வெள்ள நீரினை வெளியேற்ற முடியும் என கேள்வி எழுப்பிய வாய்க்காலை இடைமறிந்துள்ளனர்.
குறித்த சம்பவம் பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இரண்டு பிரதேச சபை தவிசாளர்களுக்கும் அறிவித்தும் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.











No comments