"மறுமலர்ச்சிக்கான பாதை - 2025" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மயிலிட்டி வடக்கு J/246 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
"கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் – மறுமலர்ச்சிக்கான பாதை" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
அதில் வலி வடக்கில் காங்கேசன்துறை கல்லூரி வீதி புனரமைப்பு பணிகள் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனினால் காப்பற் வீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த அபிவிருத்தி திட்டத்தில் வலி வடக்கு J/246 கிராம சேவகர் பிரிவில் கிராம மக்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் யார்மை குடியிருப்பு வீதி , அங்கந்தனை வீதி , நாவலடி குடியுருப்பு வீதி , பெரும்பரப்பு பிள்ளையார் குடியேற்ற திட்டம் வீதியில் 1ஆம், 2ஆம் , 3ஆம் வீதிகள், விளங்காவத்தை வெள்ளவாய்க்கால் வீதி மற்றும் கிராமக்கோடு குடியிருப்பு வீதி ஆகிய 08 வீதிகளும், விளங்காவத்தை வெள்ளவாய்க்கால் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் J/233 பிரிவுக்குட்பட்ட மாங்கொல்லை வீதி புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.












No comments