தெமட்டகொட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நேற்று (17) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ரயில் கடவை பாதுகாப்புக் கூடத்திற்கு அருகில் வைத்து, 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.







No comments