Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மண்டைதீவு புதைகுழி வழக்கு - மார்ச் 31ஆம் திகதி


மண்டைதீவு புதைகுழி கிணறுகளை அகழ கோரிய வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட நிலையில் , கொல்லப்பட்டவர்களின் உடல்களை அங்குள்ள கிணறுகளில் போட்டு மூடியதாகவும் , குறித்த கிணறுகளை அகழ்ந்து சடலங்களை எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி மகனை பறிகொடுத்த தாயொருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் அடிப்படையில்  பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர் , மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமைபொலிஸார் சமர்ப்பித்தனர். 

அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக இன்றைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்ட நிலையில் பொலிஸார் அறிக்கையை தட்டச்சு பிரதியாக சமர்ப்பித்தனர். 

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.




No comments