யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதி புனரமைப்பு பணிகள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் ஏற்பட்ட பேரிடரில் , குறிகாட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்கு செல்லும் பாதை மிக மோசமாக பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
அந்நிலையில் தற்போது, இறங்குதுறைக்கு செல்லும் பாதை அகலமாக்கப்பட்டு , துரித கெதியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.



.jpg)
.jpg)
.jpg)


No comments