பிட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை, மனைவி வெட்டி கொலை செய்துள்ளார்.
வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
விவசாய நடவடிக்கைகளுக்காக இரவு வீட்டை விட்டு வெளியேறி, காலையில் வீடு திரும்பியவர், மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார்.
அதற்கு மனைவி மறுப்பு தெரிவிக்கவே, கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறிய நிலையில், மனைவி, பிட்டு கேட்ட கணவனை கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.







No comments