Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்த அரசாங்கமும் கிராமங்களை புறம் தள்ளுகிறது - புத்தூரில் உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதில் என்ன தடை ??


நகர்ப்புறங்களை நோக்கியே இந்த அரசாங்கமும் அபிவிருத்திகளை மேற்கொள்வதால் , கிராம புறத்து சாதாரண மக்களை புறம் தள்ளி வருகிறது  என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் குற்றம் சாட்டியுள்ளார். 

வலி. கிழக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

புத்தூர் - சுன்னாகம் வீதியை முகப்பாக கொண்ட ஒரு ஏக்கர் காணியை உள்ளக விளையாட்டு அரங்குக்கு என ஒதுங்கியுள்ளோம். அந்த காணியில் விளையாட்டரங்கு அபிவிருத்திக்கு என்ற வரவு செலவு திட்டத்தில் கூட 10 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளோம். 

இவ்வாறான நிலையில் எம்மை புறம் தள்ளி . யாழ்ப்பாணத்தின் சுவாசமாகக் காணப்படும் பழைய பூங்காவின் வரலாற்றையும் இயற்கையினையும் தொன்மையினையும் கொண்ட சூழலை அழித்து உள்ளக விளையாட்டரங்கை அமைக்க முயற்சித்துள்ளார். இவ்விடயம் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமையினால் நாம் அதற்கு மதிப்பளித்து விமர்சிக்கவில்லை. 

 இம் மனுவில் இடையீட்டு மனுதாரராக நாமும் இணையவுள்ளோம்.

அரசாங்கம் யாழ் நகரின் மத்தியிலேயே அனைத்தையும் ஏற்படுத்துவோம் என்பது கிராமப் புற மக்களை புறந்தள்ளுவதாகும்.  எமது வலி கிழக்கு பிரதேசம் யாழ்ப்பாணத்தின் இதயமாக உள்ளது. சகல பிரதேச மக்களும் பயனடையக் கூடிய மத்திய அமைவிடமாகவுள்ளது. 

உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது தொடர்பில் வேறு இடங்கள் தேவைப்படின் அதற்கும் கொடையாளர்கள் எம்முடன் இணைந்துள்ளனர்.

தென்னிலங்கையில் தாவரவியற்பூங்காக்களாக மரங்களை பாதுகாக்கின்ற போது யாழ்குடாநாட்டில் வளி மண்டலமும் மாசடைந்துள்ள நிலையில் இருக்கின்ற மரங்களையும் அழிப்பது எமக்கு அச்சமளித்துள்ளது என மேலும் தெரிவித்தார். 

No comments