Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் புதிய கட்டுமானங்கள் எதனையும் செய்ய மாட்டேன் - விகாராதிபதி உறுதியளிப்பு


தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய  கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம்  என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்னமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் எதற்கும் இடமளிக்கவில்லை.

தெற்கில் இருந்து புத்தர்சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான் எவ்வாறான விசேட அனுமதியும் எதற்கும் கொடுக்கவில்லை.

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறோன்.

அதேவேளை தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என அரசாங்கத்தால், புதிய குழு அமைத்துள்ளார்கள், அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். அதே போன்று காணியை உரிமை கோரும் நபர்களும் தமது காணி தான் என்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளோம்.

இந்த விவாகரத்தில் இதொரு சட்டவிரோத செயல் என தீர்பளிக்கப்பட்டால் இதனையும் ஏற்க நான் தயார்.

விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்றார்.

No comments