நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஹெலி விபத்தில் மரணமான விமானிக்கும் , சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்ட சென்ற நிலையில் உயிரிழந்த 05 கடற்படையினருக்கு அஞ்சலி செலுத்தி யாழ்ப்பாணத்தில் பதாகை கட்டப்பட்டுள்ளது
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது கடந்த 30ஆம் திகதி ஹெலி ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.
அதன் போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார்.
அதேவேளை சுண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த போது 5 கடற்படையினர் உயிரிழந்தனர்.
குறித்த ஆறு பேருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய , ஸ்ரான்லி வீதியில் பதாகை கட்டப்பட்டுள்ளது.






No comments