வடபகுதி கடற்பரப்பு முழுவதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்
அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
அதன் போது, வடக்கு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வடபகுதி கடற்பரப்பு முழுவதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனால் வடபகுதியைச் சேர்ந்த எமது மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகின்றது என தெரிவித்தார்.
அதனை அடுத்து இந்திய இழுவைப்படகுகளின் எல்லைதாண்டிய அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம்மால் கவனஞ்செலுத்தப்படுமென ஜனாதிபதி உறுதி அளித்தார்.







No comments