சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட j 148 மற்றும் j149 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை கொண்ட சில்லாலை கிராமத்திற்குள் செல்லும் பிரதான சுற்றுவட்ட வீதி உட்பட பல உள்ளூராட்சி மன்றத்திற்குட்பட்ட வீதிகள் சேதமடைந்துள்ளதுடன் தற்போதைய சிரற்ற காலநிலையால் வீதியை பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.
குறிப்பாக சுற்றுவட்ட வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளுகைக்குள்ள வீதியாகும் அதேபோல் டச்சு வீதி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆளுகைக்குள்ளது ஏனையவை பிரதேச சபையின் ஆளுகைக்குள்ள வீதிகளாகும்
குறித்த வீதிகள் அனைத்து திணைக்களங்களுக்குள் உள்ள போதும் இக்கிரமத்தின் வடிகாலமைப்புகள் சீரான முறையில் புனரமைக்கப்படாமையால் வெள்ளநீர் வடிந்தோடாது ,வீதியில் தேங்கி நிற்பதால் ,சிரமங்கள் எதிர்நோக்கவேண்டியுள்ளது.
குறித்த வீதிகளில் பஸ் போக்குவரத்துகள் நடைபெறுவதால் வீதி பயன்படுத்தமுடியாத நிலையில் காணப்படுகின்றது
சுற்றுவட்டவீதி சேதமடைய ஆரம்பித்த காலத்திலே புனரமைக்கவேண்டும் என பிரதேச செயலக கூட்டங்கள் பொது அமைப்புகளின் கூட்டங்களில் முன்வைத்த போது குறித்த கோரிக்கைகளை முன்னுரிமைபடுத்துவதாக அடையாளப்படுத்தினார்கள் எனினும் எத்தகைய முன்னேற்றல்களும் இல்லை இனி வருட இறுதி என்பதால் இனி சாத்தியமாகுமா என கேள்வி எழுப்பியுள்ள கிராம மக்கள் அனத்த காலத்திலாவது தற்காலிகமாக சுற்றுவட்ட வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.









No comments