பொலன்னறுவை, மனம்பிட்டிய - கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை - தலுகானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய டிப்பர் சாரதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி மாலை, அவரது மனைவி தனது கணவர் வீடு திரும்பவில்லை என பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதற்கமைய, டிப்பரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவியின் ஊடாக, பரிசோதித்ததில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் பொலன்னறுவை - மைத்திரிபால சுற்றுவட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், பொலிஸார் அங்கு விரைந்து டிப்பரை மீட்டனர்.
தொடர்ந்து அப்பகுதிகளை சுற்றி தேடுதல் நடாத்தப்பட்ட வேளை, சாரதியின் சடலம் மனம்பிட்டிய கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவரை இனம் கண்டு உள்ளதாகவும் அவர்களை கைது செய்ய மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments