பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர்ப்புறத்தில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள் பருத்தித்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இணைந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர்.
அதன் போது, சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய 06 உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் உணவு கையாளுபவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.







No comments