தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
அதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினையும் தமிழ் தேசிய பேரவையினர் சந்தித்து இருந்தனர்.
அந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய பேரவை சந்தித்துள்ளது.
குறித்த சந்திப்புக்களில் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.
இந்த சந்திப்புக்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் , செ.கஜேந்திரன் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான க.சுகாஷ் , ந.காண்டீபன் ஆகியோருடன் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.





.jpeg)
.jpg)
.jpg)


No comments