Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். காற்றின் தரம் மிக மோசம் ; முகக்கவம் அணிய அறிவுறுத்தல்


நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாட்டில் பெரும்பாலான நகரங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) மிதமான அளவில் இருந்தது. அதேவேளை, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில்  சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரச் சுட்டெண் 56-134 க்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, 

அதேவேளை யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும்.

இயலுமானவரை முகக்கவசங்களை அணியவும், உணர்திறன் மிக்கவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை சந்தித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும்.

அதிகபட்ச  காற்றின் தரச் சுட்டெண்  காலை 8.00 - 9.00 மணி முதல் மாலை 4.00 - 5.00 மணி வரை இருக்கும். 

ஒப்பீட்டளவில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரச் சுட்டெண்  மிதமான அளவில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments