யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , இரு இளைஞர்களை கைது செய்து , சோதனையிட்ட வேளை இருவரிடம் இருந்தும் தலா ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






No comments