பேருந்தின் பின் பகுதி மிதிப்பலகையில் நின்று முகம் கழுவியவர் , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் குறித்த நபர் அனுராதபுரத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்ததும் , பேருந்தில் இருந்து எழுந்து , ஓடும் பேருந்தின் பின் பக்க கதவுடன் உள்ள மிதிபலகையில் நின்று போத்தல் தண்ணீரில் முகம் கழுவியுள்ளார். அதன் போது , பேருந்து சடுதியாக வளைவொன்றில் திரும்பும் போது , மிதிபலகையில் நின்று முகம் கழுவிக்கொண்டு இருந்தவர் வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
வீதியில் விழுந்து படுகாயமடைந்தவரை உடனடியாக மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






No comments