எல்ல பகுதியில் பிக்மீ மற்றும் ஊபர் போன்ற சேவைகளில் ஈடுபடும் சாரதிகளை மிரட்டி தாக்கியதாகக் கூறி கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான சுற்றுலா பகுதிகளில் சேவைகளில் ஈடுபடும் பிக்மீ மற்றும் ஊபர் சாரதிகளை அப்பகுதிகளிலுள்ள உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் மிரட்டி தாக்கியதாக எல்ல பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு நபர்கள் பிக்மீ மற்றும் ஊபர் சாரதிகளை தாக்க முயற்சி செய்ததுடன், அவரது வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை ஒன்றை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.







No comments