யாழ்ப்பாணத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
பருத்தித்துறை இன்பர்சிட்டி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் , சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
சடலத்தில் நீல நிற டெனிம் காற்சட்டையும் , பிறவுண் கலர் டீ சேர்ட்டும் காணப்படுவதாகவும் ,பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







No comments