ரோகினி நிஷாந்தன்
மன்னாரில் தங்களுக்கு சொந்தமான மாடுகளைப் பார்க்க சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மன்னார் கற்கிடந்தகுளம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் அகிலன் (வயது 18) என்ற உயர்தரம் கற்கும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் மாடுகளைப் பார்ப்பதற்கென்று நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இரவாகியும் குறித்த மாணவன் வீட்டிற்கு வராததைத் தொடர்ந்து மாணவனின் தந்தை கிராம மக்கள் உதவியுடன் அவரைத் தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாணவன் கற்கிடந்தகுளம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.






No comments