தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில் அமைச்சு அதிகாரி ஒருவர் பதவி விலகுவதை விட, கல்வி அமைச்சராக இருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவி விலகியுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அந்தக் குழுவின் தலைவரை நியமித்தவர் பிரதமர் என்பதால், அதற்கு அவரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதை நாமல் ராஜபக்ச கேலி செய்துள்ளார்.
மேலும், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் இந்தப் புத்தகத்தை அச்சிட முடியாது என்றும், அமைச்சிற்குள்ளேயே தான் இது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறி முறைப்பாடு செய்வது வேடிக்கையானது" என அவர் கூறினார்.
அமைச்சின் செயலாளரை யாரும் ஏமாற்ற முடியாது என்றும், ஒரு தனிநபர் ஒரு பாடப்பரப்பு தொடர்பாக தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் இணைவை நாம் சுப செய்தியாகவே பார்க்கின்றோம். இது இந்நாட்டு அரசியலில் இடம்பெற வேண்டிய முக்கியமானதொரு விடயமாகும். கட்சிகள் இணைந்து கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.







No comments