தமிழர்களின் அடையாளங்களை அழித்து , அவர்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு சிங்கள குடியேற்றத்தையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என உறுதியளிக்கிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்
கிவுல் ஓயா திட்டம் என்பது இன்று நேற்று கொண்டுவரப்பட்டது அல்ல. அது 1956ஆம் ஆண்டு , 72 ஆம் ஆண்டு 77 ஆம் ஆண்டு பிறகு சந்திரிக்கா , ராஜபக்சே , மைத்திரி ரணில், கோட்டாபய என மாறி மாறி வந்த ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்த இருந்தது. அன்றைய கால கட்டத்தில் சிங்கள குடியேற்றத்தை மயக்கமாக கொண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட இருந்தது. அதன் ஊடாக வவுனியா பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் நாங்கள் அவ்வாறான எண்ணத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வில்லை. வடக்கில் தற்போது நீர் பிரச்சனை காணப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்
இந்த திட்டத்தால், சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும். தமிழ் மக்களின் இருப்பு அழிக்கப்படும் என சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அவர்கள் யார் என்றால் அநுர ஜனாதிபதி ஆனால் , இனவாதம் அதிகரிக்கும், இளைஞர்கள் காணாமல் ஆக்கப்படுவார்கள் என கூறியவர்கள்
ஆனால் இன்று நடப்பது என்ன ? தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு தங்களை நிரூபித்து உள்ளது.
தமிழ் மக்களால் ஓரம் காட்டப்பட்ட அரசியல்வாதிகள் . தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் அன்பை பெற்று வருவதை சகிக்க முடியாது. இனவாதத்த்தை தூண்ட முடியுமா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால், நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. எங்களுடைய ஜனாதிபதி கூறியது போல தமிழ் மக்களின் பிரதேசத்தை தமிழ் மக்களின் மரபுக்களுடன் மீள கட்டியெழுப்போம் என மேலும் தெரிவித்தார்.







No comments