Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்ய தம்மை அனுமதிக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் , உழவு இயந்திரம் உள்ளிட்ட தொழில் உபகரணங்களை தாம் பல இலட்ச ரூபாய் செலவில் வாங்கியுள்ளமையால் , தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை  விடுத்துள்ளனர். 

அதேவேளை , வடமராட்சி கடற்பகுதியில் , வெளிமாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து தங்கி நின்று, உழவு இயந்திரங்களை பயன்படுத்தி , கரை வலை தொழில் செய்வதனால் , வடமராட்சி கிழக்கு பூர்வீக கடற்தொழிலாளர்கள் பலர் கரைவலை இழுக்கும் தொழில் இழந்துள்ளனர் 

உழவு இயந்திரங்கள் ஊடாக கரை வலை தொழில் செய்யும் போது , அனுமதிக்கப்பட்ட தூரத்தினை விட அதிக தூரம் சென்று வலைகள் இடப்படுவதால் , அப்பகுதியில் தொழில் செய்யும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் , இயந்திரம் மூலமான கரை வலை தொழிலால் , கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் , கடற்கரையில் உள்ள தாவரங்கள் கூட அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , இம்முறையே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதற்கு தடை விதித்து  அதனை இறுக்கமாக கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் 

இந்நிலையிலேயே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதனை நிறுத்த கால அவகாசம் கோரி சில கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments