பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவை பணி இடைநீக்கம் செய்தமை ஜனநாயகமற்ற செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை வழங்குவதற்கு முன்னர் விடயங்களை விசாரிக்கும் ஜனநாயக உரிமையை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செயற்படாமையினால் தனிப்பட்ட பழிவாங்கல் குறித்த சந்தேகம் எழுவது சாதாரண இயல்பு என்றும், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது ஆபத்தானது என்றும் அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




.jpeg)


No comments