கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது.







No comments