இலங்கையில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில் 2287 விபத்துக்களில் 2388 பேர் உயிரிழந்தனர். அதன்படி, 2025ஆம் ஆண்டில் 2562 விபத்துக்களில் 2710 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்களால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளமையால் இதனை கட்டுப்படுத்துவதற்கு E-Traffic செயலியில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பாதசாரிகள், பயணிகள் மற்றும் சாரதிகள் சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுதல் அல்லது போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






No comments