2 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் போதைப்பொருளை கடத்தி சென்றவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், வீடொன்றினை பொலிஸார் , சுற்றி வளைத்து சோதனைகளை முன்னெடுத்து வீட்டில் இருந்த மாமா மற்றும் மருமகனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் வசமிருந்து குஷ் , கேரளா கஞ்சா, ஐஸ் , ஹெரோயின், உட்பட பல வகையான போதைப் பொருட்கள் தொலைபேசிகள் ஒரு தொகை பணம் என்பன மீட்கப்பட்டிருந்தன.
சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வீட்டில் அதிகளவான சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் , 47 வயது 68 வயது மதிக்கத்தக்க வர்கள் எனவும், சம்மாந்துறை பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை வியாபாரம் செய்துள்ளதுடன் விநியோகம் செய்தும் வந்துள்ளமை விசாரணைணயில் இருந்து தெரியவந்துள்ளது.




.jpeg)


No comments