வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததை கண்ணுற்று , திடீரென துவிச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட வேளை , துவிச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் இருந்து கடந்த 19ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் , சிறு வீதியில் இருந்து , பிரதான வீதிக்கு துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை பிரதான வீதியில் வந்த மோட்டார் சைக்கிளை கண்ணுற்று , துவிச்சக்கர வண்டியை நிறுத்த முயற்சித்த வேளை வீதியில் விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு , தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் , தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments