Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கார் விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு காயம்


யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி நோக்கி தமது காரில் பயணித்த வேளை யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது 

விபத்தில் காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் ,  அச்சுவேலி பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments