பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்பிய மூவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த நடவடிக்கையின் போது புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பயணித்த பேருந்து , கார் , முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களை வழி மறித்து பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வெற்றிலை மென்ற மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.







No comments