Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளியை காணவில்லை


யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் நேற்றைய தினம் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். 

ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவரே காணாமல் போயுள்ளார். 

குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக படகில் காரைநகர் கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை படகின் அணியத்தில் இருந்த குறித்த கடற்தொழிலாளி தவறி கடலினுள் விழுந்துள்ளார். 

கடலில் விழுந்தவரை சக கடற்தொழிலாளிகள் தேடிய நிலையில் , கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

காணாமல் போன கடற்தொழிலாளியை சக தொழிலாளிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர். 

No comments