Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசிய மக்கள் சக்திக்கு முதுகெழும்பு உண்டா ??


இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனது உரையில், 

"தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டனர். ஆனால், காணிகளை இழந்த மக்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. இது எந்த வகையில் நியாயம்?

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் தொடர்பில்லை. இராணுவமே இந்த ஆக்கிரமிப்பைச் செய்தது. அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதான் இந்த விகாரையை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டார். இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் மற்றொரு கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரையாகும். எனவே, இந்த விடயத்தில் அரசு நீதியான முறையில் தலையிட வேண்டும்.

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசு, இவ்வாறான மோசமான செயல்களுக்குத் துணைபோகக்கூடாது." - என்றார்.

"அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். இதன்போது, வடக்கு மாகாணத்தில் நிழல் அமைச்சர்களை நியமித்து அவர்கள் ஊடாக ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

சுகாதாரத்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜாவும், கல்வி அமைச்சுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனும், மகளிர் விவகாரத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனும், உள்ளூராட்சி சபைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சு சார்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா அதில் அழைக்கப்பட்டிருந்தார். எந்த அடிப்படையில் அவரை அழைத்தீர்கள்? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகக் கேவலமான மனோநிலை.

வடக்கு மாகாண சபைக்கு எதிரானவர்கள் என்றும், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடி உயிர்த் தியாகம்கூட செய்தவர்கள் எனவும் கூறுகின்றீர்கள். ஆனால், அதே மாகாண சபைக் கட்டமைப்பில் திருட்டுத்தனமாக உங்களின் ஆட்களைப் புகுத்துகின்றீர்கள். இதுவொரு முதுகெலும்பில்லாத பண்பு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என அரசைக் கோருகின்றோம்." - என்றார்.

No comments