கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள யாழ் - கண்டி வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் வந்த இருவர், குறித்த வைத்தியரை வழிமறித்துத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான வைத்தியர் பலத்த காயமடைந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.







No comments