இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் புத்த பெருமானின் புனித தாதுக்கள் இன்றைய தினம் புதன்கிழமை இந்தியாவிற்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் புனித தாதுக்கள் தரிசனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களுக்கு இந்த புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




.jpg)





No comments