சுமார் 20 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருள் தொகையைத் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த ஹோட்டல் ஊழியர் ஒருவரை காலி, அஹுங்கல்லை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வதுகெதர, ஆந்தாதொல பகுதியில் சந்தேகநபர் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டைச் சோதனையிட்ட போதே இந்தப் பாரிய போதைப்பொருள் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்லை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின், 5 கோடி ரூபா பெறுமதியான 'ஐஸ்' என்பவையே மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் பலபிட்டிய, மகலதூவ பகுதியைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து, போதைப்பொருள் விநியோகத் தளமாகப் பயன்படுத்தி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அஹுங்கல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வளவு பெரிய தொகையிலான போதைப்பொருள் இவருக்கு எப்படிக் கிடைத்தது மற்றும் இதன் பின்னணியில் உள்ள பிரதான கடத்தல் கும்பல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




.jpg)


No comments