யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கும் போது,
சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் தொடர்பாக ஏற்கனவே பல ஆரோக்கியமான கருத்தாடல்கள் பகிரப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவதற்கு கை கொடுப்பதன் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொள்ள கூடியதாக காணப்படும்
அங்குள்ள பாடசாலை அபிவிருத்தி மற்றும் வணிக அபிவிருத்தி மேலும் அதிகரித்து செல்லும் நிலை காணப்படும்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தினத்தன்று சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக அக்கறையுடன் கருத்துக்களை பகிர்ந்தார்.
மைதானத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடாக நீண்டகால நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக எவ்வாறான முன்னேற்றங்களை மேற்கொள்ளலாம்
என்பது தொடர்பாக சாதக, பாதக தன்மைகளை ஆராய்ந்து ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும்
மண்டைதீவு மற்றும் வேலணையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றை அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பங்களிப்பு வழங்க வேண்டும்.
தொடர்ந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில்,
இக் கலந்துரையாடலின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்.
இதனூடாக பல்வேறு இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் அதனுடன் இணைந்த சேவைகள் போன்றவை யும் உருவாகும்.
அதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கையாளுவதாகவும், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்,
வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும் என தெரிவித்தார்.




.jpg)


No comments