அரிவு வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார்
யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது , வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.
அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில்
சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார். பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி சாரத்தியம் செய்து வந்தார்.
அரிவு வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளனர். அதனாலயே பொலிஸார் சுட்டுள்ளனர்.
அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே. குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றவர். அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.






No comments