பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது சிறுமியொருவர் கோடரியால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்புக்குச் சென்று விட்டு குறித்த சிறுமி வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் சிறுமியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
அதில் படுகாயமடைந்த சிறுமி பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தம்பால பகுதியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.







No comments