Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்


முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தாளையடி அஞ்சல் அலுவலகம் கோரிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி அஞ்சல் அலுவகத்தினால் , தமது பிரதேசத்திற்கு வந்த கடிதங்களின் முகவரியை கண்டறிந்து கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்க முடியாத கடிதங்களை , அவற்றின் முகவரியுடன் தமது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டு , உரியவர்கள் அலுவலகத்தில் வந்து கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளனர். 

தனிப்பட்ட நபர்களின் விபரங்களை பொது வெளியில் பகிர்வது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் , தற்போது குறித்த பதிவுகளை அஞ்சல் அலுவலகத்தினர் தமது உத்தியோகபூர்வ முகநூலில் இருந்து நீக்கியுள்ளனர்

No comments