விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றில் அத்திவாரம் வெட்டும் பணியின் போதே இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியின் மண்வெட்டியில் சிக்கி 3 மோட்டார் குண்டுகள் முதலில் மீட்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், அங்கு மேலும் குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சேற்று நீரினால் நிறைந்திருந்த குழிகளை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டனர். இதன்போது மேலும் 20 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மீட்கப்பட்ட குண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை கட்டுக்குருந்த விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.







No comments