கம்பஹா, தொம்பே பிரதேசத்தில் குழு மோதலில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காதல் விவகாரமே இந்தக் கொலைக்கான காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments