Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 25 இந்திய மீனவர்கள் இரு படகுகளுடன் கைது


காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசந்துறை கடற்படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்ட விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது , காங்கேசன்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த படகோட்டிகள் உள்ளிட்ட 25 தொழிலாளர்களையும் கடற்படையினர் செய்தனர். 

கைது செய்யப்பட்ட 25 பேரையும் அவர்களின் படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த கடற்படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர் 

No comments