Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொலை - பொலிசாரை கைது செய்ய கோரி யாழில்.போராட்டம்


யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் நடைபெற்றது. 

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும் , அதன் போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். 

நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும் , அதொரு பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பி வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்.

 சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments