யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைநகர் பகுதியை சேர்ந்த கிருஸ்ணராசா சாரங்கன் (வயது - 20) என்ற இளைஞனே உயிரிழந்தார்.
பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







No comments