Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி


வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். 

இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments