கிவுல் ஓயா திட்டத்தின் பின்னணி சிங்களக் குடியேற்றமல்ல. மாறாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை சேமிப்பதே நோக்கமாகும் என அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே அவ்வாறு தெரிவித்தார்.
"கிவுல் ஓயா திட்டத்தை வைத்து பல்வேறு விதமான கருத்துகள் பரப்பப்படுகின்றன. சிங்களக் குடியேற்றத்தை நோக்கமாகக் கொண்டு கிவுல் ஓயா திட்டம் அமைக்கப்படவில்லை. மாறாக, விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவே அந்தத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது. அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டால் தமிழ்க் குடியேற்றங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
கடந்த அரசுகளில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாங்கள் தீர்க்கமாக விசாரித்து வருகின்றோம்.
ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசு கடந்த அரசுகளைப் போன்றதல்ல. இந்த அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளது.
மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கியே அனைத்துத் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. - என்றார்







No comments