Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொருட்களின் விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாது


உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் எரிபொருள் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியில் கடுமையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.  தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 டொலரை எட்டியுள்ளது. இதன் காரணமாக விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டு, பொருட்களின் விலையில் தாக்கம் செலுத்தக்கூடும்.

பொருட்களின் விநியோகத்தைப் பாதிப்பின்றிப் பேணுவதற்காக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே பொருட்களை இறக்குமதி செய்து வந்த நாடுகளுக்கு மேலதிகமாக, புதிய நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

புதிய நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டில் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

எவ்வாறாயினும், சர்வதேச காரணிகள் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதால், பொருட்களின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என பிரதி அமைச்சர் தெரிவித்தார்

No comments