யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 23வது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி ஐம்பது ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.
அந்நிலையில் 227 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இதுவரை நடைபெற்ற 23 ஒருநாள் போட்டிகளில் சென்ஜோன்ஸ் கல்லூரி 13 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை இரண்டு கல்லூரி இடையில் 119ஆவது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் பெரும் போர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.














No comments