யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைகழகத்திற்கு அருகில் வசிக்கும் இளைஞன், பல்கலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞனை நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 41 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்நிலையில் இளைஞனை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.







No comments